உலகையே நிலை குலையச் செய்துள்ள கொரோனாவுக்கு தடுப்பு மருந்தினை கண்டுபிடித்து விட்டதாக கூறியுள்ள இத்தாலி விஞ்ஞானிகள் அதற்கு உரிமை கோருகின்றனர்.
இத்தடுப்பு மருந்தினை உருவாக்கியுள்ள டோகிஸ் என்ற நிறுவனத்தின் தலைவர் லூகி ஆரிஷியோ கூறியதாவது:
‘ இம்மருந்து உடலில் செலுத்தப்படும் போது மனித செல்களில் உள்ள கொரோனா வைரஸை செயல் இழக்க செய்யும். இது தான் இத்தாலியில் உருவாக்கப்பட்ட தடுப்பு மருந்துகளில் மிகவும் முன்னேறிய நிலையில் உள்ளது. எனினும் மனித உடலில் பரிசோதித்து பார்ப்பது கோடை காலத்திற்கு பிறகு நடைபெறும் – இவ்வாறு லூகி ஆரிஷியோ தெரிவித்தார்.
இம்மருந்தினை எலிகளில் பரிசோதித்து பார்த்த போது வைரஸ் தொற்றுவதை தடுக்கும் என்ரிபயாடிக் உருவானது தெரியவந்தது.
தற்போது உருவாக்கியுள்ள தடுப்பு மருந்து டி.என்.ஏ., புரோட்டின் மரபணு வகையைச் சேர்ந்ததாகும். இது எலெக்ட்ரோபொரேஷன் எனப்படும் மின் இடமாற்றி உத்தி மூலம் செலுத்தப்படும் போது, செல்களில் மின்புலம் உருவாகி ரசாயனம் அல்லது மருந்தினை செல் தனதாக்கி கொள்ளும்.
இந்த வகையில் தடுப்புமருந்து செல்களுக்குள் ஊடுருவிச் சென்று எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும். இவ்வகை மருந்து குறிப்பாக நுரையீரல் செல்களில் வேலை செய்யும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன் பாதுகாப்பு மற்றும் செயல்திறன் குறித்த தகவல்கள் படிப்படியான ஆய்வுகளின் மூலம் தெரிய வரும் என்று இத்தாலி விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.
Lanka Newsweek © 2026